தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படியான நிலையில் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.