தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா, சுனில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று இதுவரை ரூ. 89 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாவீரன் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தபடி இப்படம் 11ஆம் தேதியான இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனை அந்நிறுவனம் போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அப்போஸ்டர் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
buckle up for an exhilarating ride with Maaveeran ⚡#MaaveeranOnPrime, watch now!https://t.co/va89zL9Ljg pic.twitter.com/uz13ZjpCdY
— prime video IN (@PrimeVideoIN) August 10, 2023