கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழில் மாவீரன் என்றும் தெலுங்கில் மாவீரடு என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது.
இதில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாவீரன் படத்திற்கான பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Salem & Madurai Makkale #KoluthiPoduTappasa!💥😇#Maaveeran #MaaveeranFromJuly14th pic.twitter.com/ykHI2WzK1D
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 23, 2023