தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா, சுனில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை இப்படம் உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருவதாக ஸ்பெஷல் போஸ்டருடன் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் பரத் ஷங்கர் இசையமைப்பில் இடம் பெற்றிருக்கும் சூப்பர் ஹிட் பாடலான “சீனா சீனா” என்னும் பாடலின் முழு வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Koluthipodu tappasa 💥💥💥#SceneAhSceneAh uncut video song from our #Maaveeran will be out TODAY @ 5PM 🥳
A @bharathsankar12 musical 🎶
🎤 @anirudhofficial
🕺 @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH#VeerameJeyam #BlockbusterMaveeran🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl… pic.twitter.com/He7aqNnREs— Shanthi Talkies (@ShanthiTalkies) July 27, 2023