Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படப்பிடிப்பு குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்.

maaveeran-movie-shooting-update

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா திரைப்படத்தை இயக்கி பிரபலமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்துடன் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்து இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். மேலும் இன்னும் 2ல் இருந்து 3 நாட்களுக்குள் முழு படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைய இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் எனவும் கூறியிருக்கிறார்.