Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Madras HC vacates injunction against Soorarai Pottru Hindi remake

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இதனிடையே சூரரைப் போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அதில் ‘2டி நிறுவனமும், அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கினை தயாரிக்கக் கூடாது எனவும், அந்த படத்தின் பணிகளுக்கு உடனடியாக தடை விதிக்குமாறும்’ குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2டி நிறுவனம் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, இந்த வழக்கில் உள்ள தடையை நீக்கி உத்தரவிட்டார். சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தடை நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் அப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.