தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பின்னர் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்து நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றபோது இவரின் மனைவி கார் விபத்தில் பலியானார்.
இதனால் மனமுடைந்து போன முத்து அதிலிருந்து மீளவே கஷ்டப்பட்டார். இருப்பினும் தன்னுடைய குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் தற்போது அவருடைய அப்பா ராமசாமி உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இதனால் முத்துவின் குடும்பம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.