நீ பண்ண வேண்டிய வேலை எல்லாம் நான் பண்ணிட்டு இருக்கேன் என ஆங்கரை கலாய்த்துள்ளார் மதுரை முத்து.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து. இதனையடுத்து படிப்படியாக வளர்ச்சி அடைந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
அது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். தற்போது உயர்த்தி நகரில் உள்ள ஒரு கடையில் ஷாப்பிங் செய்தபோது தன்னுடன் இருந்த ஆங்கரை பங்கமாக கலாய்த்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இவர் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில்தான் ஷாப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த கடையில் பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்த நிலையில் மதுரை முத்துவும் ஷாப்பிங் செய்துள்ளார்.