விஜய் டிவியில் ஒளிபரப்பான மெகாதொடர் மகாபாரதம். யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த சீரியல் கவர்ந்தது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம் கண்முன் நிறுத்தியது. உண்மையில் மகாபாரதப் போர் இப்படித்தான் நடந்திருக்கும் என்று நம்மை எண்ண வைத்தது.
இந்த மெகா தொடரில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே இந்தி சினிமாவை சேர்ந்தவர்கள் தான். இவர்களில் சிலர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
அவர்கள் யார்? தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து நடித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
பீஷ்மர் ( ஆரவ் சௌத்தரி )
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
துருதிராஸ்டர் ( தாகூர் அனூப் சிங் )
மகாபாரத்தில் கண் தெரியாதவராக நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் அவரை எதிர்க்கும் ஸ்டைலான வில்லனாக நடித்துள்ளார்.
துரியோதனன் ( அர்பித் ரங்கா )
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றான துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் என்ற படத்தில் காலேஜ் மாணவராக ஜெயம் ரவியுடன் வம்பு இழுக்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இவர்களைப் போலவே இன்னும் பல மகாபாரத சீரியல் நடிகர்கள் தமிழில் நடித்துள்ளனர்.