Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் செய்ததற்கு காரணம் பணமா? தொடரும் விமர்சனங்களுக்கு மகாலட்சுமி கொடுத்த தரமான பதிலடி..

mahalakshimi salary details update

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது அன்பே வா சீரியல் வில்லியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குடும்பத்தார் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் மகாலட்சுமி பணத்துக்காக எதையும் செய்வார் அப்படி பணத்துக்காக ஆசைப்பட்டு தான் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் என அவரை சுற்றி பல நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

இதனால் கோபமான அவர் பேட்டி ஒன்றில் பணத்துக்காக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் நடித்து வரும் சீரியல்கள் மூலம் எனக்கு மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் வருகிறது என வெளிப்படையாக பேசியுள்ளார். இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 mahalakshimi salary details update

mahalakshimi salary details update