தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போனது. படம் தான் ரிலீசாகவில்லை படத்தின் அப்டேட்யாவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை படக்குழு ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ஒரே டிப்ரஸனா இருக்கு.. மாஸ்டர் அப்டேட் விடலனு என படக்குழுவினர் டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதற்கு மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் டோன்ட் வரி ப்ரோ ஒரு குட்டி ஸ்டோரி பாட்டு கேளுங்கள் எல்லாம் சரியாயிடும் என கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.