Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘ஆரி’ய டைட்டில் வின்னர் ஆக்குங்க – பிரபல நடிகர் வேண்டுகோள்

Make Title Winner of ‘Aari’ - Famous Actor Request

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது.

ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும். தற்போதைய சூழலில் நடிகர் ஆரி வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு நடிகரும், ஆரியின் நண்பருமான செளந்தரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எல்லாருக்கும் ஓட்டு போடுங்க, என் நண்பன் ஆரிக்கு அதிக ஓட்டுக்கள் போட்டு ஜெயிக்க வைத்து டைட்டில் வின்னர் ஆக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.