விஜய் தன்னுடைய பிறந்த நாளை நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டிலிருந்த படியே கொண்டாடினார். ஆனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் கொண்டாடினர்.
அவரின் மாஸ்டர் படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.
விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் பூஜையன்று விஜய் சாரை முதன் முதலாக சந்தித்தேன். ஆர்வமும், பதற்றமும், கொஞ்சம் பயமும் இருந்தது. அன்றைய நாள் நான் அவ்வளவாக பேசவில்லை.
அடுத்த 6 மாதங்களில் என் வாழ்வின் மிக முக்கியமான நபராக அவர் இருக்கப்போகிறார் என்பது அப்போது எனக்கு தெரியாது.
விஜய் சார் மிகவும் அன்பானவர், தயிர்சாதப்பிரியர், அதிகாலை 4 மணி நண்பர். ஆனால் சீக்கிரம் தூங்க சென்றுவிடுவார். எந்த சூழ்நிலையிலும் நேர்மறையாகவே இருப்பார்.
குறைவாகவே பேசும் பழக்கம் கொண்டவர். ஆனால் சொன்னதை செய்து வாக்குறுதிகளையும் காப்பாற்றக்கூடியவர். இப்படி ஒருவர் உருவாக முடியாது என்ற வகையில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.