Tamilstar
News Tamil News

விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார், அவருடன் நடித்தது குறித்துப் பேசிய மாளவிகா மோகனன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நேற்று தம்முடைய ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது நான் பணியாற்றியவர்களிலேயே விஜய் தான் சூப்பர் ஸ்டார். மாஸ்டர் படத்தில் பணிபுரிந்தது காலேஜ்க்கு சென்றது போலவே இருந்தது என கூறியுள்ளார்.

இவர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்திருந்த பின்னரும் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியிருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.