தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஆண் நண்பர் ஒருவருடன் பைக்கில் ஊர் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த நபர் ஹெல்மெட் அணிந்து கொண்டிருப்பதால் அது யார் என்பது சரியாக தெரியவில்லை. இந்த வீடியோ தான் தற்போது மாளவிகா மோகணன் ரசிகர்களிடையே செம ட்ரெண்டிங்.