Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜொலிக்கும் உடையில் மின்னும் மாளவிகா மோகனன்… ரசிகர்களை திணற வைக்கும் புகைப்படம்

Malavika Mohanan in Latest Glamour Photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தமிழில் அடுத்தடுத்து பிசியாகி வரும் மாளவிகா மோகனன் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.