கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ’தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படமாகும்.
இந்த நிலையில், இன்று ’தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டுள்ளார் மாளவிகா மோகனன். அவரது டுவிட்டர் பக்கத்தில், “சிலநாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளேன். இந்த நேரத்தில் ஐதராபாத் நகரத்தின் சிறிய பகுதிகளைப் பார்த்து மகிழ திட்டமிட்டுள்ளேன். சுவாரசியமான பரிந்துரைகள் ஏதேனும் உள்ளதா? வழக்கமான சுற்றுலா தலங்கள் வேண்டாம்” என்று அப்டேட் கொடுத்து நெட்டிசன்களிடம் பரிந்துரையும் கேட்டுள்ளார்.