மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை. இவர் நடிப்பில் மாஸ்டர் படத்தை அவர் மிகவும் நம்பி இருக்கின்றார்.
எப்படியும் விஜய் படம் அதனால் கண்டிப்பாக பெரிய மார்க்கெட் தமிழில் உருவாகும் என்பதால், மேலும், முன்னணி நடிகை என்ற வட்டத்திற்குள் வந்துவிடலாம் என.
சரி இது ஒரு புறம் இருக மாளவிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷாக் தான்.
இதில் தான் 14 வயதில் இருந்த போது, ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ குடிக்காதே.
அப்படி குடித்தால் இவளை போல் கருப்பாக ஆகிவிடுவாய் என மாளவிகாவை காட்டி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது, இதோ…