தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன்.
இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருவார். தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர் “உங்களுடைய எக்ஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமா? எழுதி அனுப்புங்கள். எங்களது பக்கத்தில் பதிவிடுகிறோம்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தன்னை குறிப்பிட்டு கமெண்ட் பதிவிட்ட அந்த இன்ஸ்டா பக்கத்துக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், கண்டிப்பாக எனது எக்ஸை (Ex) பற்றி முடிந்த வரையில் இன்று இரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா என்றும், அவர் மீது அப்படி என்ன கோபம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.