சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பிரபல நடிகை பிராச்சி தெஹ்லான். இவர் மம்மூட்டி நடித்து வெளியான படம், ‘மாமாங்கம்’ மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவருக்கு நடிப்பைத் தவிர பாஸ்கெட் பாலிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால்,தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.
ஹிந்தி டிவி சீரியலிலும் இவர் நடித்துள்ளார் பின்னர் சில பஞ்சாபி படங்களிலும் நடித்தார். அதன்பின் அதிக வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை. ஆனால் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அவருடைய காதல் திருமணம், வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது.இவர் ஏழு ஆண்டுகளாக டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ரோஹித் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.
இவருடைய திருமணம் டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளதாகவும், 50 பேருக்கு மட்டும் திருமண அழைப்பு விடுத்திருப்பதாகவும், வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.