Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முழுமையாக நிறைவு பெற்ற மாமன்னன் படப்பிடிப்பு.. மகிழ்ச்சியில் கேக் வெட்டிய படக்குழு

mamannan movie has-been-completed

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

அதனால் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அதனை மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்களை உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.