தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு “சூரரை போற்று” திரைப்படம் வெளியானது. இப்படத்தை சுதா கொங்குரா இயக்கியிருந்தார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்த இப்ப படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இந்த திரைப்படம் நேற்றைய தினம் 68 வது தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று பிறந்தநாள் காணும் சூர்யாவுக்கு நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு. அன்புள்ள சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
National award. A beautiful birthday gift..
Happy birthday Dear @Suriya_offl pic.twitter.com/fdIdbj2ImH— Mammootty (@mammukka) July 22, 2022