அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.