மாங்காய் பயன்படுத்தி நம் சருமத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாகவே மாங்காய் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பொருட்களில் ஒன்று. இப்படியான நிலையில் மாங்காய் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளும் அதில் உள்ள சத்துக்களும் நம் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.
நம் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்க பச்சை மாங்காய் பெருமளவில் உதவுகிறது. மாங்காய் பயன்படுத்தி ஃபேஸ் பேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஒரு பச்சை மாங்காய் எடுத்துக்கொண்டு அதன் சதைப் பகுதியை வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து மாவை சேர்க்கவேண்டும் சேர்த்த பிறகு தயிர் மற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கி பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்க வேண்டும். நன்கு கலந்த கலவையை 15 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து கெட்டியாகும் வரை காத்திருக்கவும்.
பிறகு முகத்தை கழுவி சுத்தப்படுத்திய பிறகு இந்த மாங்காய் கலவையை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவ வேண்டும்.
ஒரு சிலருக்கு இந்த கலவை அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏற்பட்டால் கையில் முதலில் பூசிக் கொண்டு கழுவி பார்க்க வேண்டும். எரிச்சல் ஏற்பட்டால் கொஞ்சம் எண்ணையை தடவிக் கொண்டால் சரியாகி விடும்.