மாங்கொட்டை யில் இருக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
நம் அன்றாடம் உண்ணும் பழங்களில் பெரும்பாலும் அதிகம் உண்ணப்படும் பழம்தான் மாம்பழம். இந்த மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கொட்டையை தூக்கி வீசி விடுவார்கள் ஆனால் அந்தக் கோட்டையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டு அதிகம் உள்ளது. நம் உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றி மாங்கொட்டை பெரிதளவில் உறவு உதவுகிறது.
மாங்கொட்டையை உலர வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்கவும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதுமட்டுமில்லாமல் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் வழி வகிக்கிறது. இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் இதய நோய் உள்ளவர்களுக்கு 30% நோயை குறைக்கும் தன்மை உடையது.
மேலும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் ஸ்கர்வி நோயை குணப்படுத்த மாங்கொட்டை உதவுகிறது.