தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனும் நடிகருமான இவர் தொடர்ந்து நல்லவிதமாக விளையாடி நிலையில் இவரது வெளியேற்றம் சிலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram