தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து நான்கு சீசனங்களில் கோமாளியாக இருத்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு பிரியங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து விலகினார்.
பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த மணிமேகலை தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆர் ஜே விஜயுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சி விரைவில் பிரமாண்டமாக தொடங்க உள்ளதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.