Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

CWC நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை.வைரலாகும் அறிவிப்பு..!

manimegalai-quit-from-cook with comali-4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காம் சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் மணிமேகலை. அறிமுகமான இவர் கடுமையான உழைப்புக்கு பிறகு மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மணிமேகலையின் ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகமானது. கோமாளியாக முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கும் மணிமேகலை தற்போது குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அதாவது என்னுடைய கடைசி எபிசோட் இதுதான் நானே வருவேன் கெட்டப்பில் உங்களை கடைசியாக சந்திக்கிறேன். இனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன என்பதெல்லாம் மணிமேகலை தெரிவிக்காத நிலையில் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் சக பிரபலங்கள் என பலரும் மணிமேகலை உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.