Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

BMW பைக்கில் கெத்து காட்டும் மஞ்சு வாரியர்.போட்டோஸ் வைரல்

manju-warrier-bmw-bike-ride-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். மலையாள திரை துறையை சார்ந்த இவர் தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இதற்கிடையில் மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து லடாக் பைக் ட்ரிப் சென்று இருந்தார். அதன் பிறகு பைக் மீது அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட மஞ்சு வாரியர் சில மாதங்களுக்கு முன்பு BMW பைக்கை வாங்கி இருந்தார். அதன் வீடியோவையும் பதிவிட்டு அஜித்திற்கு நன்றி தெரிவித்திருந்த மஞ்சு வாரியர் தற்போது அதில் ரைடு சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.