Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்.வீடியோ வைரல்

manju-warrier-bought-a new bmw-bike

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். மலையாள திரை துறையை சார்ந்த இவர் தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் BMW பைக்கை வாங்கி இருக்கும் வீடியோ இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட மஞ்சு வாரியர் ஏற்கனவே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துடன் இணைந்து இமாலயா மலையில் பைக் ரைடு சென்று இருந்தார். அதன் புகைப்படங்களும் அப்போது பயங்கரமாக வைரலானது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் பைக் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிய தகவலும் இணையத்தில் வெளியாகி வரலானது. ஆனால் தற்போது மஞ்சு வாரிய சொந்தமாக BMW பைக்கை வாங்கி இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். மேலும் அதில் அவர், “தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் ஒரு நல்ல இடம்” என குறிப்பிட்டு ‘என்னைப் போன்ற பலருக்கும் உத்வேகமாக இருந்ததற்கு நன்றி அஜித் சார்’ என்று அப்பதிவில் தெரிவித்து வெளியிட்டு இருக்கிறார். இப்பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.