தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இந்த படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தன. தற்போது அதனை பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார் மஞ்சு வாரியர். படத்தில் நடிப்பது உண்மை தான். கதை என்ன என்பதை சொல்ல முடியாது. ஆனால் சஸ்பென்ஸ் நிறைந்த கதை. என்னுடைய கதாபாத்திரத்திரமும் பிடித்து இருந்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என கூறியுள்ளார்.