Tamilstar
News Tamil News

தல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது..! பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம்

தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் என்றால் மாஸ் என்று கூட கூறலாம். இந்நிலையில் மங்காத்தா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் பாலிவுட்டில் இருந்து கேட்டார்களாம்.

அப்போது ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர், “எனக்கு மங்காத்தா படத்தில் இருந்ததை விட சில மாஸ் காட்சிகள் வேண்டும்,

ஏனென்றால் எனக்கு தல அஜித் அளவிற்கு மாஸ் கிடையாது அதனால் தான் என்று கூறினாராம்” என இயக்குனர் வெங்கட் பிரபு, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.