Tamilstar
News Tamil News

ஹீரோயின்களுக்கு எப்பவுமே போட்டியாக போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!!

தமிழ்சினிமாவில் இயக்குனராகும் பிரபல நகைச்சுவை நடிகராகவும் வலம் வரும் மனோபாலா ஹீரோயின்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு பக்கா டிசைனர் டிரஸ் கோட் உடன் போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனோ பாலாவுக்கு தற்போது வயது 66. இருப்பினும், சமீப காலத்தில் இளம் நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் காம்பெடிஷன் கொடுக்கும் அளவுக்கு எல்லாம் அணிந்துகொண்டு ஊசி உடம்பை வச்சுக்கிட்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் இவர் கெட்டிக்காரர்.

இவர் நடிகர் கார்த்தியின் ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் தொடங்கி சிவாஜி,விஜயகாந்த், ஜெயராம் என மிகப்பெரிய ஜாம்பவான்களையும் இயக்கிய பெருமைக்குரியவர்.

சமூக வலைதளங்களில் நடிகைகள் தங்களது போட்டோக்களை அப்டேட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் டாப் கொடுக்கும் அளவிற்கு மஞ்ச மஞ்சேறுன்னு தக தகவென ஜொலிக்கும் அளவுக்கு செம ஸ்கைலோட வளைச்சு வளைச்சு பலவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார் நடிகர் மனோபாலா.

அந்த போட்டோவை இணைய தளத்தில் பதிவிட்டு இது எப்படி இருக்கு? என்ற பதிவுடன் இணையதளத்தையே தெறிக்க விட்டுள்ளார்.சீரியல் நடிகை ஷிவானி சமீபத்தில் சேரில் அமர்ந்தபடி செக்ஸியாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த சேர் சூப்பரா? மனோபாலாவின் இந்த சேர் போட்டோ சூப்பரா என ரசிகர்கள் கம்பேர் பண்ணி கமெண்ட்டுகளை தாறுமாறாக போட்டு தள்ளுகின்றனர்.

மேலும் ரசிகர்கள் இளைய நாயகனே என்ற தலைப்பில் ஒரு வீடியோவையும் கிரியேட் செய்து பதிவிட்டுள்ளனர் அதைப் பார்த்த மனோபாலா அதற்கு ”ஐயோ பாடி தாங்காது பா.. சும்மா எடுத்த போட்டோ பா.. இதெல்லாம்” என்று பதிலளித்துள்ளார்.