தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலையிலிருந்து தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என சரத்குமார் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சரத்குமாருடன் மனோபாலா அவர்களும் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இது தளபதி அறுபத்தி ஆறு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் அல்ல வேறு ஒரு படத்தின் புகைப்படம் என மனோபாலா ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
The picture circulating on social media Of Sarath Kumar by the name of #Thalapathy66 shooting spot is FAKE .
— #Thalapathy66 (@Vijay66OffI_) May 12, 2022