Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நடிகைகள் குறித்து கேவலமாக பேசி இருப்பது தனது மனதை நோகச் செய்கிறது”: மன்சூர் அலிகான்

கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்” என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, “கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mansoor Ali Khan latest speech Viral
Mansoor Ali Khan latest speech Viral