காளான் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கிறது.
பொதுவாக காளானை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் ஏனெனில் அதன் ருசி மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் இதை முதலாவதாக தேர்வு செய்வார்கள்.
காளானில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் புற்று நோய் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் காளானில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பீட்டா குலுக்கன் என்ற நார்ச்சத்து உள்ளது இது நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதுமட்டுமின்றி சரும தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க காலானிலுள்ள பாலிசாக்கரைடுகள் பெருமளவில் உதவுகிறது.
காலானிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கிறது.