Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எல்லாமே மாறிடுச்சு…. எனக்கு தெரிந்த பலர் கொரோனாவால் இறந்துட்டாங்க – நடிகை ஜனனி

Many people I know have died of corona - Actress Janani

தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கைவசம் தற்போது யாக்கை திரி, பகீரா, முன்னறிவான், கசட தபற போன்ற படங்கள் உள்ளன.

மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்து நடிகை ஜனனி கூறியதாவது: “கொரோனா 2-வது அலை எல்லோரையும் அதிகமாக பயமுறுத்தி உள்ளது. எனக்கு தெரிந்த பலர் இந்த கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். எல்லாமே மாறிவிட்டது. இப்போது மீண்டும் படவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன்.

இது சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு புறம் பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் வீட்டிலேயே முடங்கி இருக்க முடியாது. நான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதனால் நம்பிக்கை வந்து இருக்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருப்பேன்.

நான் நடித்துள்ள இரண்டு படங்களுக்கான டப்பிங்கை கொரோனா பரவல் அதிகமானதால் தொடர முடியாமல் நிறுத்த வேண்டி வந்தது. இப்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் ஸ்டுடியோவுக்கு செல்லும் அளவு நம்பிக்கை வந்திருக்கிறது” என்றார்.