காலையில் தினமும் டீ, காபி குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் அனைவரும் காலையில் காபி அல்லது டீயை குடித்தே நம் நாள் துவங்கும். ஏனென்றால் டீ காபி குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சியாக இருப்பதை உணர்வார்கள். ஆனால் இது ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் ஆபத்தை விளைவிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது சுவாச துடிப்பு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரிடும். காலையில் டீ மற்றும் காபி குடிக்கும் போது ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. மேலும் குமட்டல் பிரச்சனையையும் உண்டாக்கும்.
தினமும் டீ காபியை தொடர்ந்து குடித்தால் பசியின்மை ஏற்பட்டு உணவை குறைத்து உடலில் கலோரி பற்றாக்குறை ஏற்படும்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இது மட்டும் இல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கி செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் ரத்த செல்களை தூண்டி நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கமும் ஏற்படுத்த கூடும். இது உடலுக்கு மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தி விடும்.