Tamilstar
News Tamil News

சுஷாந்தை தொடர்ந்து பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை, திரையுலகத்தினர் அதிர்ச்சி…!

இந்திய சினிமா இந்த வருடம் மிகவும் சோதனைகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர் ஓபன் ஆகாமல் இருப்பது பலருக்கும் நஷ்டத்தை கொடுத்துள்ளது.

அதோடு பல திரைப்பிரபலங்கள் இறந்து வருவது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

ரிஷி கபூர், இர்பான் கான், கன்னட சிரஞ்சீவி ஆகியோர் உடல்நலம் முடியாமல் இறந்தனர்.

சமீபத்தில் தான் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்ற விவரம் சரியாக கிடைக்கவில்லை.

அதோடு சுஷாந்த் கேஸ் அவரின் காதலியான ரேகா பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து தற்போது மராத்தி சினிமாவின் முன்னணி நடிகர் அஷிடோஷ் பக்ரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுல்கத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் ஏன் தற்கொலை செய்தார் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை, போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு மனிதன் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறான் என்ற வீடியொவை இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளாராம்.