தமிழ் சினிமாவில் வில்லன் குணசேத்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் அரைகுறை உடையில் போட்டோ வெளியிட்டு மொபைல் நம்பரை கேட்ட பெண்ணுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை கொடுத்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் தற்போது இது குறித்து பேட்டி அளித்துள்ளார். ஆமாம் அந்த பொண்ணுக்கு நான் தான் நம்பர் கொடுத்தேன் அதில் என்ன தப்பு? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் நான் சாமி கும்பிட மாட்டேன் நியூமராலஜி பார்க்க மாட்டேன் கோவிலுக்கு போக மாட்டேன் இவங்க எல்லாம் அரைகுறை நாய்ங்க என தன்னை பூமர் என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இவருடைய இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
🤷🏻♂️ pic.twitter.com/2rvVKMv2sb
— Jesse Pinkman ❤️ (@Putinism7) March 3, 2023