தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க போவது யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இப்படியான நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்க நானே ரெடி என அவருடைய தம்பி தெரிவித்துள்ளார். அப்படி இல்லை என்றாலும் அவருக்கு பதிலாக வேறு யாராவது நடித்தால் டப்பிங் மட்டுமாவது நானே கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.
இவரது பேட்டியை பார்த்து சீரியல் குழு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
