’எதிர்நீச்சல்’ தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க ‘எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை ‘எதிர்நீச்சல்’ தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கல் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ், நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
