Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் படத்தை பாராட்டிய முதல்வருக்கு இயக்குனர் போட்ட நெகிழ்ச்சி பதிவு

mariselvaraj thanking post viral about cm m k stalin update

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பாராட்டி திரைப்படங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் “மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.