தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வரும் இவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.
எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வினோத் தயாரித்துள்ளார். முதல் நாளே தமிழகத்தில் 7 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த இந்த திரைப்படம் தொடர்ந்து கிடைத்து வரும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஒவ்வொரு நாளும் வசூலில் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் மூன்று நாளில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Day 1 – 7.88 cr
Day 2 – 8.64 cr
Day 3 – 9.97 cr
இப்படி மூன்று நாளில் மொத்தமாக 26.49 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
