Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மார்க் ஆண்டனி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்

mark-antony-movie-update

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக விளங்கும் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. ரித்து வர்மா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு நடிகர் கார்த்தி குரல் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, டைம் டிராவல்ஸ் சம்பந்தமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் கதையை விவரிப்பது போன்று அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாவீரன் திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தது போல் இப்படத்திற்கு கார்த்தி கொடுத்திருப்பது படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.

mark-antony-movie-update
mark-antony-movie-update