இன்று கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு ஒருவரின் அன்றாட நடவடிக்கையின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது.
முகக்கவசத்தை போடுவதும் கழற்றும் முறையும் சரியாக இருக்கவேண்டும்.
ஆனால் அவற்றை சரியாக எப்படி பராமரிப்பது, எப்படி அகற்றுவது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இது கூட கொரோனா வைரஸினை அதிகப்படுத்த ஒரு காரணமாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது மாஸ்க்கை பயன்படுத்தும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
கடைபிடிக்க வேண்டியவை
- பருத்தி அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது நல்லது.
- COVID-19 நோயாளியுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு துணி முகமூடிகளை சோப்பு நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம்.
- உங்க முகமூடிகள், கையுறைகள், திசுக்கள் மற்றும் சானிட்டைசர் காலியான பாட்டில்களை மூடியுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
- முடிந்த வரை மறுபடியும் பயன்படுத்தும் முகமூடிகளை பயன்படுத்துங்கள். இது நிறைய மாஸ்க் குப்பைகளில் போவதை தடுக்கும்.
- COVID-19 நோயாளிகளுடன் தொடர்புடைய நபருக்கு N95 முகமூடிகள் அவசியம். அதே மாதிரி ஆல்கஹால் வகை சானிட்டைசரை பயன்படுத்துங்கள்.
- பயன்பாட்டு பொருட்களை மூடி உள்ள குப்பை தொட்டியில் போட பழகுங்கள்.
- அகற்றுவதற்கு என்று தனி பெட்டிகள், கொள்கலன்களை பயன்படுத்துங்கள்.
செய்யக் கூடாதவை
பாலிப்ரொப்பிலீனால் செய்யப்பட்ட மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு கிட்களை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இவற்றை அப்புறப்படுத்துவது என்பது கடினமான ஒன்று.