Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் சமந்தா படத்தின் செட்

Massive Rs 3 crore set erected for Samantha's 'Yashoda'

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது பன்மொழி திரைப்படமான ‘யசோதா’ தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக ரூ.3 கோடி செலவில் நட்சத்திர ஓட்டலைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா பிரசாத், திரைப்படத்தின் கதை நட்சத்திர ஓட்டலின் பின்னணியில் நடப்பதாக அமைந்துள்ளது. இதற்காக பல்வேறு நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்றோம். ஆனால் தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு சிரமமாக இருப்பதால் இந்த செட் அமைக்கப்படுகிறது’ என்று கூறினார்.

இந்த பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல் செட், கலை இயக்குனர் அசோக் தலைமையில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் விடுமுறையில் உள்ள நடிகை சமந்தா விரைவில் படப்பிடிப்புக்கு திரும்ப உள்ளார்.