Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை குறித்து வெளியான செம மாஸ் அப்டேட் – இத தானே எதிர்பார்த்தீங்க.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கி வருகிறார். தல அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். RX 100 படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயா அஜித்துக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது கொரானா வைரஸ் பரவல், ஊரடங்கு உத்தரவு போன்றவைகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ள இந்த படப்பிடிப்பில் அஜித்தும் சில நாட்கள் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் வலிமை படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது என அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை படக்குழு பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.