கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கைவசம் ‘பிசாசு 2’ படம் உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram