Tamilstar
News Tamil News

மாஸ்டர் படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படத்தை பார்த்தவர்களே கூறிய விமர்சனம் இதோ!

பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பல இளம் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த மாதம் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதிகாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

அப்படத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்காக டப்பிங் செய்த ரவீனா மாஸ்டர் படத்தின் காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டு போனாராம், மேலும் டப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும்போது “படம் வேற லெவல்” என கூறியுள்ளார்.